புதிய ஆத்திசூடி- NEW SAYINGS FROM POET BHARATHI

பாரதியாரின் புதிய ஆத்திசூடியிலிருந்து சுய முன்னேற்றம் சார்ந்த சில.
Nationalist poet Sri Subramanya Bharathi’s Sayings

1. அச்சம் தவிர் – AVOID FEAR

2. ஆண்மை தவறேல் – SLIP NOT FROM VALOR

3. எண்ணுவது உயர்வு – THINK HIGH

4. ஓய்தல் ஒழி – GIVE UP LAZING AROUND

5. கற்றது ஒழுகு – PRACTICE WHAT YOU LEARNT

6. காலம் அழியேல் – DO NOT WASTE TIME

7. குன்றென நிமிர்ந்து நில் – STAND TALL LIKE MOUNTAIN

8. கெடுப்பது சோர்வு – LAZINESS SPOILS

9. கேட்டிலும் துணிந்து நில் – BE BRAVE EVEN DURING TURBULANCE

10.கைத்தொழில் போற்று – ADORE YOUR OCCUPATION

11. கௌவியதை விடேல் – DO NOT GIVE UP UNDERTAKEN TASK

12.சிதையா நெஞ்சு கொள் – HAVE A HEART HARDLY BROKEN

13.சுமையினுக்கு இளைத்திடேல் – DO NOT BE DISHEARTENED BY RESPONSIBILITY

14.செய்வது துணிந்து செய் – BE BOLD IN DOING

15.சொல்வது தெளிந்து சொல் – STATE WITH CLARITY

16.ஞிமிரென இன்புறு – ENJOY YOUR WORK LIKE BEES

17.தன்மை இழவேல் – DO NOT  DISLODGE FROM YOUR NATURE

18.தாழ்ந்து நடவேல் – DO NOT LOWER YOUR ESTEEM

19.தோல்வியில் கலங்கேல் BE NOT DISILLUSIONED WITH FAILURE

20.நாளெல்லாம் வினை செய் – ENGAGE IN ACTIVITIES FULL DAY

21. நினைப்பது முடியும் – WHAT IS CONCEIVED IS WELL ACHIEVED

22.நுனியளவு செல் – FINIISH TASK TILL THE LAST STRAW

23.நையப் புடை – DO WIITH FULL DETARMINATION

24.நோற்பது கைவிடேல் – GIVE UP NOT COMMITMENT

25. புதியன விரும்பு – SEEK FOR NEW

பயனுள்ள வாழ்க்கை

Ò        பாரமார்த்திக நோக்கத்திலும் சக்தியிலும் தினமும் முன்னேறுவீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        அனுதினமும் நேர்மையான குணத்தாலும் பொலிவினாலும் துலங்குவீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        பிறருக்குப் பயனுள்ள வகையில் வாழ்வீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        உங்களுடைய பொறுப்புகளை அவசிய பணிகளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது!

Ò        வாழ்க்கை நிலையை, வாழ்க்கைச் சூழலை சஞ்சலமற்ற நம்பிக்கையோடு சந்திப்பீர்களானால் வாழ்க்கைப் பயனுள்ளது.!

Ò        நியாயத்தின் பாதையில், நேர்மையான முறையில் பயணிப்பீர்களானால் வாழ்க்கை பயனுள்ளது.!

Ò        குற்றம்,துக்கம், நோவு நிறைந்த உலகிலும் நீங்கள் வலிமையுடனும், பிரகாசமாகவும் இருப்பீர்களானால் வாழ்க்கை பயனுள்ளது.!

Ò        படைத்தவனோடு சேர்ந்தே இருக்கிறீர்கள், படைத்தவனை சார்ந்தே இருக்கிறீர்கள் என்றால் வாழ்க்கை பயனுள்ளது!.

Ò        பகவான் தரும் பாதுகாப்பும் வழிகாட்டுதலும் தீர்மானமானது தவறாதது என்ற உணர்வில் அன்றாடம் வளர்ந்துகொண்டிருப்பீர்களானால் வாழ்க்கை பயனுள்ளது!

(O P GHAI ஆங்கில மூலத்தைத் தழுவி தமிழில் என் மொழியில்) .

 

வாழும் கலை – OP Ghai

வாழ்க்கை பற்றிய சில சிந்தனைகள்

  •  வாழும் கலையை அறிந்து பயனடைய வேண்டுமெனில் பல ஆண்டுகளாய் கடைபிடித்த கட்டுப்பாடு, கவனித்து அறிதல், அனுபவம் ஆகியவை தேவை.
  •  நம்முடைய தவறான கணிப்புகளையும், குறைகளையும், திருத்திக் கொள்ள அன்றாடம் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன.
  • இன்னும் சிறப்பாகவும்,வித்தியாசமாகவும் எந்தெந்த காரியங்களை செய்திருக்கக்கூடுமென கவனித்தீர்களானால், உங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு இன்னும் சிறப்பாக செய்து விடலாம். அதற்கு விழிப்புணர்வு போதும்.
  • வாழ்க்கை என்பது பள்ளிக்கூடம். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடது, எப்படி திட்டமிட வேண்டும், எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை கற்றுணரலாம்.
  • இந்த பள்ளியின் ஆசிரியர் சில சமயம் கடுமையாகவும், கருணையற்றவராகவும் தோன்றலாம்; ஆனால் இந்த கடுமையும், போதனையும் அப்போது வேதனையாகத் தோன்றினாலும் நம்முடைய நலனுக்கே என பின்னாளில் புரியும்.
  •  வாழ்க்கை என்னும் அற்புதமான கல்விக் கூடத்தில் கிடைக்கும் பாடத்தை நன்கு படித்தறியுங்கள்
  •  அவ்வப்போது ஏதேனும் சிக்கல் வந்தாலும் உறுதியாக இருங்கள் ஏனெனில் தீர்வு எங்கோ காத்திருக்கிறது. ஒருநாள் உங்களை உறுதியாக வந்தடையும்.